Tuesday, 12 June 2012

வழக்கு எண் 18/9 திரைப்படத்தை பார்த்தப்போது இரண்டு வகை உணர்வுகள் இரண்டு இடங்களில் மேலோங்கி வந்தன. ஒரு இடம் ஆஸிட் ஊற்றும் இடம். அப்பாடா இவ்வளவுதானா என்கிற சமாதான உணர்வு. பல வகை வன்முறைகளை தமிழ்ப்படங்களில் பார்த்து பார்த்து ஆஸிட் ஊற்றுவது சாதாரணமாக இருந்தது. 

இரண்டாவது இடம் நீதிபதியிடம் எப்படி பேசவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் வேலுவிற்கு பயிற்சி அளிக்கும் இடம். நான் நினைத்துக் கொண்டேன் நமக்கு குடும்பம் நண்பர்கள் என்று ஒரு பின்னணி உள்ளது. இல்லை என்றால் இப்படி ஓரு பொய் வழக்கு போட்டு உள்ளே போனால் ஆதோகதிதான் என்கிற பய உணர்வு.

முதல் உணர்வுக்கு காரணம் தமிழ்ச் சினிமா என்றால் இரண்டாவது உணர்வுக்குக் காரணம் தமிழ்ச் சூழல்.
உண்மையில் வழக்கு எண் 18/9 இன்றைய தமிழ் சினிமாவையும், தமிழ்ச் சூழலையும் கணக்கிலெடுத்துக் கொண்டு (டிஜிடல்) படைப்புருப் பெற்ற திரைப்படம்.

இப்படித்தான்  வீிட்டு வேலைக்கு தன் மகளை அனுப்புகிற அம்மா எண்ணியிருப்பாள் அவர்கள் வீட்டுப் பிரச்சனையில் தன் மகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அஞ்சியிருப்பாள்

இப்படித்தான் பணக்கார பெற்றோர் எண்ணியிருப்பார்கள் நம் மகனும் வெறிபிடித்தவன் போல் நடந்து கொள்கிறான். அவன் எந்ந பெண் மீதாவது ஆஸிட் ஊற்றிவிடுவானோ என்று சிந்தித்திருப்பர்கள்.

எல்லா படங்களிலும் தான் கதையிருக்கிறது. உருக்கமான காட்சிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இது படம் என்கிற உணர்வு மட்டும்தான் ஏற்படுகிறதே அன்றி வாழ்க்கை பிரதிபளிப்பை உணரமுடிவதில்லையே ஏன்?  மிக எளிமையான பதில். அது படமாக்கப்படும் விதத்தால் வருவது. வழக்கு எண் திரைப்படம் தனது தனித்துவத்தை உறுதி செய்திருக்கிறது.
காதல் திரைப்படம் போன்று. கல்லுாரி?.......

கல்லுாரி படத்திற்கும் வழக்கு எண்18/9 படத்திற்கும் ஓரு முரண் ஒன்றுமை உள்ளது. கல்லுாரி, ஓரு சம்பவத்தை நோக்கி அழைத்துச் செல்லும். வழக்கு எண் 18/9, ஒரு சம்பவத்தில் இருந்து தொடங்கி அதன் விளைவுகளில் போய் கலக்கிறது.

ஓரு சம்பவத்தை மட்டும் நம்பியதால்தான் கல்லுாரி படத்தில் காட்சிகள் அந்நியப்பட்டன. நடிகள்கள் புது முகமாக தெரிந்தனர். எப்படியும் அந்தகாட்சி கடைசியில்தான் வரும் என்றதால் மற்ற எல்லாகட்சிகளும் அலுப்பு தட்டின.
ஆனால வழக்கு எண் 18/9 படமோ இவை எல்லாவற்றிகும் நேர்மாறாக ஆரம்பம் முதல் விறுவிறுப்பை கூட்டிக் கொண்டே போனது ( இணை காட்சிகள் அதாவது வேலு-ஜோதி பகுதில் தினேஷ்-ஆர்த்தி காட்சிகளை கொண்டுவந்தது பார்வையாளர்களை எப்போதும் விழிப்பில் வைத்திருந்தது. மறுபாதியில் தலைகீழாகச் செய்தது)

முதலில் கதாபாத்திரங்களைப் பார்ப்போம்




வேலு



ஆரம்பம் முதல் அன்பிற்காக ஏங்குபவன். தந்தை கிட்னி விற்க எண்ணும்போது படிப்பை விட்டு அடிமை வேலைக்கு போகிறான். சின்னசாமியும் தள்ளுவண்டி கடை முதலாளியும் இவன் அப்பாவிதனத்தை நினைத்து வருந்துகிறார்கள். காதலிக்காத, சொல்லப்போனால் பேசிப்பழகாத ஒரு பெண்ணுக்காக- அவள் முகம் பழைய நிலைக்குவர வேண்டி, வாழ்நாள் சிறை ஏற்றவன். அன்புக்காகவே ஆரம்பம் முதல் இறுதிவரை ஏங்குகிறான்.


ஜோதி

படம் முழுவதும் அவள் மௌனமாக இருக்கிறாள். இறுதியில் அவள் செய்யும் ஒரு செயல் அவள் எல்லா மௌனங்களையும் அர்த்தப்படுத்திவிடுகின்றன. சொல்லப்போனால் போலிஸ் அதிகாரியிடம் அவள் தரும் கடிதம் சொல்கிறது ஒரு அப்பாவி வாழ்க்கையை பத்து லட்சத்திற்காக பாழாக்கிவிட்டாயே என்று. தன்னை காதலித்தவன் என்றோ, தனக்கு சம்பந்தமானவன் என்றோ ஒரு ஆனால் வரிகூட இல்லை. ஒருவேளை ஆஸிட் ஆர்த்தி மீது ஊற்றப்பட்டு பழி வேலு மீது பொயிருந்தாலும் ஜோதி இதே செயலைத்தான் செய்திருப்பாலோ என்று நம்மை எண்ண வைக்கிறது.


ஆனால் ஒரு குறை. நான் ஜோதி நிலையில் இருந்து பார்க்கும் போது என்மீது ஆஸிட் உற்றப்பட்டிருந்தால் நான் என்ன யோசித்திருப்பேன். நான் அப்படி என்ன தவறு செய்தேன். என் அம்மா அப்படி ஆஸிட் ஊற்றும் அளவிற்கு என்ன தவறு செய்தார்கள். வேலு ஒருமுறைக் கூட காதலை சொல்லவில்லை. கடைசி சந்திப்பில்கூட நான் பா்ஸ் தரும்போது அவன் சிரித்து வழிந்தான். பின் எதற்காக இப்படி எனக்குச் செய்தான். ஆனால் அவள் விதிவிட்ட வழி என்று முக்காடு போட்டுக்கொண்டு பாத்திரம் தேய்ப்பது முரண். அதுவும் பின்னால் காவல்அதிகாரிக்கு பழிக்கு பழி வாங்கப்போகும் அவள் இப்படி இருப்பது பெரிய முரண்
நீங்கள் கேட்கலாம் அப்படியே அவள் நினைத்திருந்தாலும் அதை எப்படி சொல்வது. ஓருபாதி படம் வேலு கோணத்தில் போகிறது மறுபாதிபடம் ஆர்த்தி கோணத்தில் போகிறது. என்றால் சின்னசாமி ஜோதியை சந்திக்கும் காட்சியில் அவள் முதலில் சின்னசாமியைப் பார்த்து நான் என்ன தவறு செய்தேன். அவன் ஏன் இப்படி செய்தான் என்று கேட்டிருக்கலாம். பிறகு சின்னசாமி எல்லாவற்றையும் சொல்லியிருக்கலாம்.

சின்னசாமி

படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றவன். தெருக் கூத்திற்கு என்று தனி படம் எடுத்தாலும் இத்தனை அழுத்தமாக பதியவைக்க முடியுமா என்று தெரியவில்லை. சின்ன சாமியை வைத்து மாண்டாஜ் என்று சொல்லக்கூடிய காட்சிக்கோர்வையில் தெருக் கூத்தை அதற்கான தனித்தன்மையுடன் பதிவுசெய்திருக்கிறார்.
அப்பட்டமான தவறுகளைக் கூட தட்டிக் கேட்க மாக்ஸியம் போன்ற தத்துவார்த்த பின்னணிதான் தேவை என்றில்லாமல். சின்னசாமி ஜோதி அம்மாவிடம் சொல்கிறான் “நான் செய்யலாம்னு நெனச்சேன்”.     பொதுவுடமை தத்துவத்தின் மீது மரியாதை இருந்தாலும் கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு?

ஆர்த்தி

இந்தப் படத்திலேயே மிக அருமையான கதாப்பாத்திரம் ஆர்த்தி. முதலில் செல்போன் மீது சபலம் கொள்கிறாள். தினேஷ் மீதான ஈர்ப்பிற்கு அது முக்கிய காரணமாகிறது. அது பெரிய பிரச்சனைக்கு இட்டுச்செல்ல ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக மீண்டு வெளியே வருகிறாள்.

குறிப்பாக அவள் செல்போன் மெமரி கார்டை எடுத்தபிறகு விட்டுக்கு போகும் அந்தப் பயணம். அதாவது ஆர்த்தியின் அந்த மனநிலை படத்தின் போக்கிற்கு, தனித்தன்மைக்கு ஆதாரமாகிறது. அவள் காரைவிட்டு இறங்கி ஓடி ஆட்டோவில் ஏறியிருந்தால் தினேஷ் துரத்தியிருப்பான். அது பழையபடம். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் சொல்லி ஒப்பாரி வைத்திருந்தால் அவர்கள் குடும்பமும் தினேஷ் குடும்பமும் சண்டையிட்டு இருப்பார்கள். அது இன்னொரு பழையபடம். அம்மாவிடம் பாதி விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு ஆட்டோவில் உடன் வர அழைத்துப் போகும் அந்தச் செயல் தினேஷை கோபமுட்டுகிறது. அப்பாவி ஜோதியை உருகுலையவைக்கிறது.

நான் சொல்லவருவது ஆர்த்தியின் செயல் புதிய பட அனுபவத்தை மட்டும் தரவில்லை. உயர்நடுத்தர வா்கத்திற்கும் விளிம்புநிலை மக்களுக்குமான தொடா்பை காட்டியிருக்கிறது. முன்னவர்களால் பின்னவர் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்கிற சிந்தனை இடத்திற்கு இட்டுச் செல்கிறது. எவ்வளவு அடுக்குமாடிகள் தோன்றினாலும், அங்கு வேலைசெய்ய விளிம்பு நிலைமக்கள் அதே விகிதத்தில் தேவைப்படுவார்கள். அவர்களை வேலைக்குமட்டுமல்ல மேல்தட்டுவர்கம் தங்களுக்குள் சண்டை நடக்கும் போது பழிவாங்கிக்கொள்ளவும், சமாதானம் ஏற்படும் போது சரணடைய வைக்கவும் இருக்கும் வசதிகளை வெளிச்சம் போட்டு காட்குகிறது

ஆர்த்தி தானாக வந்து போலிஸிடம் சொல்கிறாள். அதுவும்நெடுநேரம் காத்திருந்து.(முதல் பிளாஷ்பெக்கில் ஆர்த்தி காத்துக்கொண்டிப்பதை காவல் இன்பெக்டருக்கு தெரிப்பார்).

மொத்தத்தில் ஆர்த்தி, தான் எத்தனை பெரிய பிரச்சனையில்மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்து கொண்டு சமயோசிதமாக யோசித்து வெளியே வந்ததில் ஆர்த்தி மிக எதார்த்தமான - தனித்துவமான பாத்திரம்.


அம்மாக்கள்

படத்தில் வரும் அனைத்து அம்மாக்களும் இந்த பதுகாப்பற்ற சமூக சூழலில் இருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பேராடுகிறார்கள். அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் வேறுபாடுகள் இருக்கலாம். ஜோதி அம்மாவைப் போல. ஓருவிதத்தில் தினேஷ் அம்மாவும் பரிதாபத்திற்கு உரியவராக தெரிகிறார்.

இன்ஸ்பெக்டர்

சின்னசாமிக்கு பிறகு அனைவராலும் பாராட்டப்படும் நடிகர். இவரது எதார்த்த தோற்றமும், நடிப்பும், படத்தின் காட்சிகளுக்கு உண்மைதன்மையை கூட்டித்தருகிறது.

உண்மைதன்மைக்கு உதவிய உறவு

ஆர்த்தி- ஜோதி உறவு மிக எதார்த்தமாக உள்ளது. பொதுவாக சமவயது உள்ளவர்கள் என்னதான் முதலாளி-தொழிலாளியாக இருந்தாலும் நட்பாக பழகுவார்கள். இங்கு அது இல்லை. என்ன- ஏது? அவ்வளவுதான்

படமாக்கக்பட்டவிதம்

இன்று நடக்கும் காட்சிகள் எல்லாம் கேண்டிட் கேமரா போன்று  நடிகர்களுக்கே தெரியாத மாதிரி மறைந்திருந்து. படமாக்கிறவிதம்  எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை உண்மைதன்மையை தருகிறது. இரண்டு flash back களும் சாதாரணமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் ஆரம்ப காட்சியை காட்சிபடுத்திய விதம் அருமை. ஒரு மருத்துவமனை வராண்டாவில் ஆர்த்தி குடும்பம் ( கைகளை பிசைந்து கொண்டு ஆர்த்தி பள்ளி சீருடையில்) சற்று இடைவெளிவிட்டு ஜோதி அம்மா உட்கார்ந்து கொண்டு மார்பில் அடித்துக் கொண்டு அழுகிறார். இந்த இரு பிரிவுக்கும் இடையே இன்ஸ்பெக்டா் ஜோதி அம்மா தரும் தகவலை வைத்து போன் செய்கிறார்.



Tuesday, 5 June 2012

suri pagalavan on vazhakku en in kanchi ilakkiyakkalam meeting
ajayanbala on vazhakku en 18/9 at kanchi ilakkiyakkalam meeting part 3
ajayanbala on vazhakku en 18/9 at kanchi ilakkiyakkalam meeting part 2
ajayanbala on vazhakku en 18/9 at kanchi ilakkiyakkalam meeting part 1
vazhakku en part 2